2010-01-22 15:24:06

பூட்டானின் புதிய ஜனநாயக அரசு, பழைய முடியாட்சி பற்றிய சிந்தனைகளையே கொண்டுள்ளது-பூட்டானிய அரசியல் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது


சன.22,2010 பூட்டானின் அரசியல் சாசனம் ஜனநாயகத்திற்கான வழிமுறைகளைக் கொடுத்திருந்தாலும் அந்நாட்டின் புதிய ஜனநாயக அரசு, பழைய முடியாட்சி பற்றிய சிந்தனைகளையே கொண்டுள்ளது என்று பூட்டானிய அரசியல் இயக்கம் ஒன்று கூறுகிறது.
பூட்டானில் 2008ம் ஆண்டில், முதல் ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்ற போதிலும், சிறைகளில் இருக்கின்ற அரசியல் கைதிகள், பத்திரிகை சுதந்திரம், கூட்டம் நடத்தும் சுதந்திரம் போன்ற பல தீர்க்கப்படாத விவகாரங்கள் இன்னும் அந்நாட்டில் இருக்கின்றன என்று புதுடெல்லியில் தஞ்சம் தேடியுள்ள அந்நாட்டின் Druk தேசிய காங்கிரஸ் இயக்கம் குறை கூறியது.குறிப்பாக, 1990ம் ஆண்டிலிருந்து நேபாள எல்லைகளில் அமைந்துள்ள ஐ.நா.முகாம்களில் வாழும் 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட அகதிகளின் நிலை மாறாமல் இருக்கின்றது என்று அந்த இயக்கம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.