2010-01-22 10:21:17

நாளும் ஒரு நல்லெண்ணம். 23.01.


பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்

பேணுமாயிற் பிறகொரு தாழ்வில்லை

என்ற பாரதி,

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வயம் தழைக்குமாம்.

எனவும் கூறிச்சென்றார்.

வேட்டைக்கு ஆணும் வீட்டுக்குப் பெண்ணும் என்பது, அன்று இயல்பான முடிவே.

இன்று இருவரும் அலுவலகம் எனும்போது பகிர்தலும் இயல்பாய் வந்திடல் வேண்டும்.

ஆனால்,

வெளி உலகில் எத்தனை சாதித்தாலும், வீட்டுக்குள் மனைவி, மருமகள், தாய் என்பதன் கற்காலக் கடமைகளும் தடையின்றி நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாய் இருக்கிறது.

கேள்விக் கேட்டால், பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொலைத்தவள் பட்டியலில் இடம்பெற வேண்டியிருக்கிறது.

இதையொட்டியே இரு பக்க குழப்பம் ஒன்று.

உரிமை என்பது கடமைகளிலிருந்து விடுதலை பெறவா?

அல்லது இங்கு கடமைகளைக் காட்டி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளனவா?

தீர்ப்புகள் கிட்டலாம்.

அனால் நீதியோடு கூடியதாய் அது இருக்குமா என்பதே கேள்விக்குறி.








All the contents on this site are copyrighted ©.