2010-01-22 15:24:19

சீனாவில் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் மீதான அடக்குமுறைகள் கடந்த ஆண்டில் அதிகரிப்பு - ஹூயுமன் ரைட்ஸ் வாச்


சன.22,2010 மனித உரிமை நடவடிக்கையாளர்கள் மற்றும் மனச்சான்றின் சுதந்திரத்திற்காக உழைப்பவர்கள் மீதான சீன அரசின் அடக்குமுறைகள் கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக ஹூயுமன் ரைட்ஸ் வாச் என்ற மனித உரிமைகள் அமைப்பு குறை கூறியது.
மனித உரிமைகள் குறித்த சர்வதேச விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, சீன அரசு, நீதித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை, மாறாக, மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு எதிரான சிறைத்தண்டனைகள் நீட்டிக்கப்பட்டது உட்பட அரசியல் நோக்கம் கொண்ட செயல்பாடுகள் அதிகரித்துள்ளன என்றும் அந்த அமைப்பு கூறியது. மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலட்சக்கணக்கானச் சீனக் குடியேற்றதாரரில் 34 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதி ஆவணங்களுடன் வேலை செய்கின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.