2010-01-21 15:15:13

ஒரே பாலின திருமணங்களை ஊக்குவிக்கும் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ளது தலத்திருச்ச்சபை


சன.21,2010 ஒரே பாலின திருமணங்களை ஊக்குவிக்கும் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கி, தேர்தலில் நிற்க அனுமதியளிக்கும் பிலிப்பின்ஸ் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து கவலையை வெளியிட்டுள்ளது அந்நாட்டு தலத்திருச்ச்சபை.
இக்கட்சியானது தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்குச் செல்லும் பட்சத்தில், ஒரே பாலின திருமணங்கள் சட்டம் மூலம் அங்கீகரிக்கப்படவும், அதன் வழி குடும்ப மதிப்பீடுகள் அழிவுறவும் வழி வகுக்கும் என உரைத்தார், பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் குடும்பங்களுக்கான அவையின் தலைவர் அருட்தந்தை Melvin Castro. மீனவர்கள், பழங்குடியினர் என சிறுபான்மை சமுதாயத்தினர் பெற வேண்டிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை, ஒரே பாலின நடவடிக்கையாளர்களுக்கும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று எனக் கூறுகிறது, பிலிப்பின்ஸ் தலத்திருச்ச்சபை.







All the contents on this site are copyrighted ©.