2010-01-21 15:14:06

இந்திய கிறிஸ்தவ முஸ்லிம் தலைவர்களின் உயர்மட்டக் குழுவொன்று உள்துறை அமைச்சரைச் சந்தித்தது


சன.21,2010 இந்திய ஆயர் பேரவையின் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் செயலர் அருட்தந்தை Cosmon Arokiaraj வடஇந்திய கிறிஸ்தவ சபையின் செயலர் Rev Dr Enos Das Pradhan ஆகியோரை உள்ளடக்கிய கிறிஸ்தவ முஸ்லிம் தலைவர்களின் உயர்மட்டக் குழுவொன்று உள்துறை அமைச்சர் பா. சிதம்பரத்தை இப்புதன் மாலை சந்தித்துப் பேசியது.
ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளில் ஒன்றைச் சுட்டிக்காட்டி, மதத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் நிலையிலிருந்து கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் விலக்குவது அரசியல் சட்டத்தின் முன் பாகுபாடுகளை வளர்ப்பதாகும் என்றும், வரும் சனவரி 26 அன்று  இந்தியா குடியரசான 60ஆம் ஆண்டைக் கொண்டாடும் போது, இது போன்ற பாகுபாடுகளைக் களைய வேண்டுமெனவும் இந்தக் குழு அமைச்சரிடம் தனது கோரிக்கையைச் சமர்பித்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், தற்போதைய அரசு இந்தப் பிரச்னையை ஆராய்ந்து வருவதாகக் கூறிய அமைச்சர், குரான், விவிலியம் இவற்றில் பாகுபாடுகள் இருக்கக்கூடாதெனக் கூறியிருப்பதை அந்தக் குழுவினருக்கு எடுத்துக்கூறினார்.







All the contents on this site are copyrighted ©.