2010-01-20 15:44:34

ரஷ்யாவின் விண்வெளி நிலையத்தில் சிலுவை உட்பட புனித பொருட்கள் 


சன.20,2010 ரஷ்யாவின்         விண்வெளி நிலையத்திற்கு நான்கு நற்செய்திகளும், சிலுவை ஒன்றும், நான்கு பிற திருஉருவங்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று ரஷ்ய விண்வெளி வீரர் Maskim Suraev கூறியுள்ளார். இந்தப் புனித பொருட்கள் விண்வெளி நிலையத்தில் உள்ள பூஜ்ய புவியீர்ப்பு சக்தியினால் அந்த நிலையத்தில் மிதந்து வருவதைப் போன்ற ஒரு நிழல்படம் ரஷ்யா டுடே என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தான் விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்த நேரத்தில்  இயேசுவின் சிலுவையிலிருந்து எடுக்கப்பட்ட திருப்பண்டத்தை உள்ளடக்கிய சிலுவை ஒன்று ஒரு குருவால் தனக்குத் தரப்பட்டதெனவும் அந்தச் சிலுவை தான் பூமிக்குத் திரும்பும் வரை தன்னுடன் இருக்கும் என்றும் விண்வெளி வீரர் Suraev கூறியுள்ளார். புனித   பொருட்கள் விண்வெளி பயணத்தில் எடுத்துச் செல்லப்படுவது இது முதல் முறையல்ல என்றும், 2008ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர் Ronald Garan புனித குழந்தை தெரசாவின் புனித பண்டத்தைத் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் என்றும், அவர் மீண்டும் 2011ல் செல்லவிருக்கும் மற்றொரு விண்வெளி பயணத்தில் மற்றொரு புனித பண்டத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.