2010-01-20 15:43:50

பாங்காக்கில் துறவு சபைகளைச் சார்ந்த இளையோரும், குருமட மாணவர்களும் இணைந்து சேரிகளில் வாழும் குழந்தைகளுக்கென நடத்திய ஒரு நாள் கருத்தரங்கு


சன.20,2010 தாய்லாந்தின் பாங்காக்கில் துறவு சபைகளைச் சார்ந்த இளையோரும், குருமட மாணவர்களும் இணைந்து அந்நகரத்தின் சேரிகளில் வாழும் குழந்தைகளுக்கென நடத்திய ஒரு நாள் கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டிகளில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். பாங்காக் உயர் மறைமாவட்டத்தின் Banchong Sae Ung   என்றழைக்கப்படும் சமுதாயப் பணி மையம் நடத்திய இந்த ஒரு நாள் செயல்பாடுகளில் புத்த மதத்தைச் சார்ந்த குழந்தைகளும், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் குறித்தும், போதைப்பொருள்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒரு நாள் நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. தாய்லாந்தின் நீதித்துறை அமைச்சர் பிரப்பன் சலிரதவிபாக (Pirapan   Salirathavibhaga) இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார் எனச் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.