2010-01-19 16:40:14

ஹெயிட்டியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென  கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் உதவிகள்


சன.19,2010 ஹெயிட்டியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென 2 லட்சம் போர்வைகள், 15,000 முகாம் விரிப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், சுகாதாரம் தொடர்புடைய பொருட்கள் போன்றவைகளை அனுப்பியுள்ளதாக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
ஏற்கனவே காரித்தாஸ் அமைப்பின் உதவி பொருட்கள் 20 கனரக வாகனங்களில் Port-au-Prince ஐ வந்தடைந்துள்ளன. இடம் விட்டு இடம் நகரும் 2 அறுவை சிகிச்சை மையங்களை ஏற்கனவே அமைத்துள்ள இக்கத்தோலிக்க உதவி அமைப்பு, மேலும் ஆறு சிறு மருத்துவ மையங்களை வாகனங்களில் அமைத்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை வழங்க முடிவு செய்துள்ளது.
நில நடுக்கத்தின் பாதிப்புகளுக்கிடையே உடனடியாக தங்கள் பணிகளைத் துவக்கியதில் ஹெயிட்டி காரித்தாஸ் அமைப்பு, அமரிக்க ஐக்கிய நாட்டின் CRS எனும் கத்தோலிக்கத் துயர் துடிப்பு நிறுவனம், சுவிட்சர்லாந்து காரித்தாஸ் அமைப்பு போன்றவை முதன்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஹெயிட்டியின் அண்டைய நாடான Dominican குடியரசிலிருந்து காரித்தாஸ் அமைப்பு, ஹெயிட்டி மக்களுக்கு குடிநீர் சேகரிப்பு சாதனங்கள், கொசுவலை, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைப் பங்குதள அமைப்புகள் மூலம் வழங்கி வருகிறது.







All the contents on this site are copyrighted ©.