2010-01-16 13:19:05

மனித வியாபாரம் ஒரு நிழல் தொழிற்சாலை - அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர்


சன.16,2010 மனித வியாபாரம் ஒரு நிழல் தொழிற்சாலை என்றும், அடிமைத்தனம் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது என்பதற்கு இது ஓர் சான்றாகும் என்றும் அமெரிக்க கத்தோலிக்கர் இதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஒரேகான் பேராயர் John Vlazny கூறினார்.
உலகில் இடம் பெறும் போதைப் பொருள் வியாபாரத்திற்கு அடுத்தபடியாக வெகு வேகமாக வளர்ந்து வரும் குற்றவியல் வியாபாரம் மனிதர்கள் சட்டத்திற்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவது என்று பேராயர் மேலும் கூறினார்.
பாலியல் துர்ப்பிரயோகம் அல்லது கட்டாய வேலைக்காக அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் ஆண்டுதோறும் பதினெட்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொண்டுவரப்படுகிறார்கள் என்று பேராயர் Vlazny தெரிவித்தார். ஒரு வாரத்தில் மூன்று முதல் ஐந்து பேர்வரை மனித வியாபாரத்திற்குப் பலியாகின்றனர், இவர்களில் ஏறத்தாழ எண்பது விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் பாதிப்பேர் சிறார் என்று ஒரேகான் காவல்துறை அறிவித்துளள்ளது.







All the contents on this site are copyrighted ©.