2010-01-16 13:19:31

மங்கோலிய நாட்டில் மரண தண்டனையை இரத்து செய்வதாக அறிவித்துள்ளதைப் பாராட்டியுள்ளார் ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர்


சன.16,2010 மங்கோலிய நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டத்தை அந்நாட்டு அரசுத் தலைவர் Elbegdorj Tsakhia இரத்து செய்வதாக அறிவித்துள்ளதைப் பாராட்டியுள்ளார் ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை.
மங்கோலியவில் மரண தண்டனை 30 வருட சிறைத் தண்டனையாக மாற்றப்படும் என்றும் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனை மாற்றப்படும் என்றும் Tsakhia அறிவித்துள்ளார்.
அரசுத் தலைவரின் இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை, மங்கோலிய மக்களின் மனித உரிமைகள் வலுப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுதற்கு உதவும் என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.தற்சமயம் உலகில் சுமார் 140 நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டத்தைத் தடை செய்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.