2010-01-15 12:50:48

நாளும் ஒரு நல்லெண்ணம் - ஜனவரி 16.


ஜாதி சாதித்தது என்ன?

பிறப்பால் உயர்வு தாழ்வு என்பதை பகுத்தறிவுள்ளவர் ஏற்க முடியுமா?

பிறப்பினால் ஒருவரை ஒரு சாதிக்குள் தள்ளிவிடும் சதியில் நமக்கும் உடன்பாடா?

தனிப்பாதை, தனிப்பள்ளி, தனிக்குளம், தனிக்குவளை, ஏன் தனிக்கோவில் என இரண்டிரண்டாய் இருப்பது வேற்றுமையில் ஒற்றுமையா?

இந்த அவலத்தின் முன்னால், என்னுடைய நாடு, என்னுடய ஊர் என்பதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் உள்ளதா?

ஆயிரம் ஆயிரமாண்டுகளாய் நாகரீகத்தின் அத்தனை பரிணாமங்களையும் தாக்குப்பிடித்து, ஜாதி என்பது இன்னும் இருக்கிறது என்றால், நம் சுயநலங்கள் தானே காரணம்?

கீழ்வெண்மணியாய் மேலவளவு, முதுகுளத்தூர், மாஞ்சோலை, சங்கனாங்குளம், கொடியங்குளம், உஞ்சனை, திண்ணியம், சென்னகரம்பட்டி, பாப்பாட்டி, காளப்பட்டி, கீரிப்பட்டி என பட்டியலிட்டு உத்தப்புரம் தாண்டி சாதி சதிராடுகிறதே!" எப்படி முடிகிறது?

தடுத்து நிறுத்த ஒரே வழி தான் உள்ளது.

பகுத்தறிவு பரவலாக்கம் பெறவேண்டும். மனச்சுவர்கள் தகர்க்கப்படவேண்டும்.








All the contents on this site are copyrighted ©.