2010-01-14 15:26:13

ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பேராயர் Joseph Serge-Miot உயிரிழந்தார்


சன.14,2010 இச்செவ்வாயன்று ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் Port-au-Prince உயர் மறை மாவட்ட பேராயர் Joseph Serge-Miot உயிரிழந்தார். 61 வயதான பேராயர் Miot 1997ஆம் ஆண்டு முதல் பேராயராக பணி புரிந்து வந்துள்ளார்.  Port-au-Prince நகரத்திலிருந்து 10 மைல் தூரத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்ததால், அந்நகரத்தின் பேராலயம், பேராயரின் இல்லம், பல பெரும் கோவில்கள் என்று அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன என்று ஹெயிட்டிக்கான வத்திக்கான் தூதர் பேராயர் Bernadito Auza வத்திக்கானின் Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். உயிரிழந்த 61 வயதான பேராயர் Joseph Serge-Miot ன் உடல் தரை மட்டமான பேராயர் இல்லத்தின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதென செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. வத்திக்கான் தூதர் பேராயர் Auza நில நடுக்கத்தில் பெரும் சேதமடைந்துள்ள நகரத்தைப் பார்வையிட்டதாகவும், ஹெயிட்டியின் அரசுத்தலைவரைச் சந்தித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களையும், தன் அனுதாபங்களையும், உறுதுணையையும் தெரிவித்ததாகவும் அச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.