2010-01-14 15:29:01

கராச்சியில் கிறிஸ்தவர்களுக்குச் சேவை செய்வதற்குப் போதுமான குருக்கள் இல்லை


சன.14,2010 பாகிஸ்தான் கராச்சியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக் கூடிவருகிறதெனவும், அவர்களுக்குச் சேவை செய்வதற்குப் போதுமான குருக்கள் இல்லை எனவும் பாகிஸ்தான் தலத் திருச்சபை தலைவர் ஒருவர்  கூறியுள்ளார். அண்மையில் கராச்சியில் நடைபெற்ற குருத்துவ நாள் கொண்டாட்டங்களின் போது, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களிடம் கராச்சியின் முதன்மை குரு Arthur Charles பேசுகையில், கராச்சி மறைமாவட்டத்தில் பணி புரியும் ஒவ்வொரு குருவும் பங்கு பணிகள் தவிர குறைந்தது மூன்று அல்லது நான்கு பிற பணிகளையும் மேற் கொள்கின்றனர் என்று கூறினார். புனித பத்தாம் பத்திநாதர் இளம் குருமாணவர்கள் இல்லத்தின் தலைவராக இருக்கும் அருட்தந்தை Benjamin Shehzad பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் நகரத்தின் சேரிகள் அதிகமாகி வருகின்றன என்றும் அவற்றில் வாழும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறதென்றும் குறிப்பிட்டு, குருக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒவ்வொரு விசுவாசியையும் தனிப்பட்ட வகையில் வழிநடத்தும் வசதி இல்லாமல் போகிறதென்று கூறினார். கராச்சி உயர்மறைமாவட்ட பேராயர் Evarist Pinto இந்த குருத்துவ நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, திருப்பலி நிறைவேற்றினார்.







All the contents on this site are copyrighted ©.