2010-01-12 16:22:45

நலஆதரவு சீர்திருத்தங்களை அரசியலாக்குவது கவலை தருகிறது- அமெரிக்க ஆயர்கள்


சன.12,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டு நலஆதரவு சீர்திருத்தங்கள் முக்கியமானவை எனினும் அவைகளை அரசியலாக்குவது கவலை தருவதாக உள்ளதாக அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

நலஆதரவு சீர்திருத்தங்களில் கருக்கலைப்புக்கு மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

நலஆதரவு குறித்தவைகளில் புகுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பற்றிக் கருத்து வெளியிட்ட அமெரிக்க கர்தினால் டானியேல் திநார்தோ, இம்மாற்றங்கள் மனித வாழ்வு மற்றும் மனச்சான்றிக்கான மதிப்பையும் ஏழைகள் மற்றும் குடியேற்றதாரர்களின் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

நலஆதரவு சட்டம் என்பது, ஏழைகள், குடியேற்றதாரர்கள், குறைந்த வருமானக் குடும்பங்கள், நோயாளிகள், கருவில் வளரும் குழந்தைகள் ஆகியோருக்குப் பலன் தருவதாக இருக்க வேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அரசை விண்ணப்பித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.