2010-01-12 16:22:57

Guantanamo சிறைச்சாலை உடனடியாக மூடப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் கத்தோலிக்கக் குழு உண்ணா நோன்பு


சன.12,2010 Cuba வின் Guantanamo சிறைச்சாலை உடனடியாக மூடப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் கத்தோலிக்கக் குழு ஒன்று ஏனைய மனித உரிமை நடவடிக்கையாளர்களுடன் இணைந்து பதினோரு நாள் ஜெபம், தியானம், உண்ணா நோன்பு உட்பட பல பொது நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளது.

தவறு செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், ஏனையோர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமேயொழிய, தொடர்ந்து சிறை வைக்கப்படல் கூடாது எனக் கூறும் "சித்ரவதைக்கு எதிரான சாட்சிய அமைப்பு" இத்திங்கள் முதல் வெள்ளை மாளிகை முன் உண்ணா நோன்பை மேற்கொண்டு வருகிறது.

Guantanamo சிறை தான் பதவியேற்ற ஓராண்டிற்குள் மூடப்படும் என்ற அரசுத்தலைவர் பராக் ஒபாமாவின் வாக்குறுதி காப்பாற்றப்படாதது குறித்து கவலையையும் வெளியிட்டுள்ளது இக்கத்தொலிக்கக் குழு.

விசாரணைகள் ஏதுமின்றி இன்னும் 198 பேர் Guantanamo சிறையில் அமெரிக்க ஐக்கிய அரசால் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.