2010-01-11 15:22:43

பொருளாதார நெருக்கடி காரணமாக மண முறிவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


அண்மை பொருளாதார நெருக்கடி காரணமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மண முறிவுகளின் எண்ணிக்கை 4 விழுக்காடு குறைந்துள்ளதாக, அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருமணங்களின் நிலை குறித்து Virginia பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அமெரிக்கர்கள் திருமணத்தைத் தள்ளி வைப்பதாகவும் இவ்வாய்வுமூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1960ம் ஆண்டில் பெண்கள் மற்றும் ஆண்களின் சராசரி திருமண வயது 20 மற்றும் 23 என்றிருக்க 2007ல் இது 26 மற்றும் 28ஆக உயர்ந்துள்ளதாகவும், இதற்கு திருமணமின்றி சேர்ந்து வாழ்தலும் ஒரு காரணமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளால் மக்களிடையே மதுபான வகை பயன்பாடு, பதட்டம், எதிலும் ஆர்வமின்மை போன்றவை அதிகரித்துள்ளதாகவும் அண்மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.