2010-01-11 14:36:47

உலகிற்கு, விசுவாசத்தின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டுணரப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது-திருத்தந்தை


சன.11,2010 : உலகிற்கு, விசுவாசத்தின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டுணரப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இயேசுவின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறன்று, மரபுப்படி வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் 14 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கி மறையுரையாற்றிய திருத்தந்தை, இக்குழந்தைகளுக்கு இந்நாள் மாபெரும் நாள், திருமுழுக்கு திருவருட்சாதனத்தை இவர்கள் பெறுவதன் மூலம் கிறிஸ்துவின் மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்குதாரர்களாக மாறுகின்றனர் என்று உரைத்தார்.

இந்த நம் காலத்திலும் விசுவாசம் ஒரு கொடையாக இருக்கின்றது, இது மீண்டும் கண்டுணரப்பட வேண்டும் மற்றும் அதற்குச் சான்று பகர நம்மையே பண்படுத்த வேண்டும் என்றும் அவர் உரைத்தார்.

கிறிஸ்தவர்களாக வாழ்வதன் அழகையும் மகிழ்வையும் நம் ஆண்டவர் அனைவருக்கும், குறிப்பாக இக்குழந்தைகளின் பெற்றோருக்கும் ஞானப் பெற்றோருக்கும் அருள்வாராக என்றும் கூறிய திருத்தந்தை, இவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, இக்குழந்தைகள் தங்கள் வாழ்வு முழுவதும் வாழ உதவட்டும் என்றும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.