2010-01-09 16:49:49

பாலஸ்தீனாவில் இஸ்ரேலின் ஆக்ரமிப்புகள நிறுத்தப்பட வேண்டும்-முக்கிய கிறிஸ்தவ குழுக்களின் தலைவர்கள் அழைப்பு


சன.09,2010 : பாலஸ்தீனாவில் இஸ்ரேலின் ஆக்ரமிப்புகளும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா உட்பட முக்கிய கிறிஸ்தவ குழுக்களின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கெய்ரோஸ் பாலஸ்தீன அறிக்கை என்ற தலைப்பில் கிறிஸ்தவத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீனாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் சுவர் இடிக்கப்பட்டு, அமைதியைக் கொணர்வதற்குத், தெளிவான எண்ணத்துடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உலகிலுள்ள திருச்சபைகள் மற்றும் நன்மனம் கொண்டோரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அவ்வறிக்கை, அமைதி இயலக்கூடியதே என்று கூறியுள்ளது.

கடந்த அறுபது வருடங்களாக கட்டாயமாகத் துன்பங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீனியர்கள் பாகுபாட்டுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்றும், இஸ்ரேலின் ஆக்ரமிப்பு கடவுளுக்கும் மனித சமுதாயத்திற்கும் எதிரான பாவம் என்றும் அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.