2010-01-09 16:47:03

சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குகிறார் திருத்தந்தை


சன.09,2010 : இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று காலை பத்து மணியளவில் வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் நடைபெறும் திருவழிபாட்டில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு திருவருட்சாதனம் வழங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பல நாடுகளைச் சேர்ந்த 14 குழந்தைகள் இஞ்ஞாயிறன்று திருமுழுக்குப் பெறுகின்றனர்.

மேலும், உரோமையிலுள்ள வட அமெரிக்க பாப்பிறை கல்லூரி தொடங்கப்பட்டதன் 150ம் ஆண்டை முன்னிட்டு இச்சனிக்கிழமை வத்திக்கானில் அக்கல்லூரியின் சுமார் 550 பேரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை.

அமெரிக்காவிலுள்ள திருச்சபை அறிவுக் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும், உண்மையிலேயே கத்தோலிக்கமான இந்தக் கலாச்சாரம், விசுவாசம் மற்றும் அறிவில் ஆழமான இணக்கத்தைக் கொண்டுள்ளது என்று அமெரிக்காவுக்கானத் தமது திருப்பயணத்தின் போது கூறியதை இச்சந்திப்பில் நினைவுபடுத்தினார் திருத்தந்தை.

இந்தக் குருக்கள் ஆண்டில், புனிதர்கள் பெரிய கிரகரி, பத்தாம் பத்திநாதர், ஜான் வியான்னி வின்சென்ட் தெ பவுல் போன்றோர் இக்கல்லூரியில் தங்கிப் பயிலும் குருத்துவ மாணவர்கள் மற்றும் குருக்களுக்குத் தூண்டுகோலாக அமைவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.