2010-01-08 15:23:14

ஐரோப்பா தனது கோட்பாடுகளை நினைவில் கொள்ளுமாறு செக் குடியரசு ஆயர்கள் வலியுறுத்தல்


சன.08,2010 வகுப்பறைகளில் திருச்சிலுவைகளை மாட்டியிருப்பது உரிமைகளை மீறுவதாகும் என்ற ஐரோப்பிய நீதிமன்றத்தின் அண்மை தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, ஐரோப்பா தனது கோட்பாடுகளை நினைவில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர் செக் குடியரசு ஆயர்கள்.

தலைநகர் பிராக்கில் (Prague) இவ்வாண்டின் முதல் ஆண்டுக் கூட்டத்தை நடத்தி அறிக்கை வெளியிட்ட செக் குடியரசு ஆயர்கள், எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய அவையும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது என்பதை ஐரோப்பிய சமுதாய அவையின் உறுப்பு நாடுகள் புறக்கணிக்காது என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தனது பிள்ளை படிக்கும் இத்தாலிய பள்ளியில் திருச்சிலுவை அகற்றப்பட வேண்டும் என்று ஒரு தாய் ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்து கடந்த டிசம்பரில் வெளிவந்த தீர்ப்பு குறித்து இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர் செக் ஆயர்கள்.

திருச்சிலுவை, கிறிஸ்தவர்க்கு உரியது எனினும் இது பொதுவான ஐரோப்பிய பாரம்பரியத்திற்கு உரியது என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.