2010-01-07 14:52:14

இலங்கையில் நடக்கவிருக்கும்  தேர்தலை யொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள்


சன.07,2010 சனவரி 26ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலை யொட்டி, அந்நாட்டின் மக்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் ஆகியோர் அடங்கிய 40 பேர் கொண்ட குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு சபைகளின் துறவியர் இக்குழுவில் இணைந்து செயல்படுகின்றனர் என்றும், இந்தத் தேர்தலையொட்டி சுற்றுமடல்களைப் பங்குகளுக்கு அனுப்பும்படி ஆயர்களை இந்தக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்தக் குழுவை வழிநடத்தும் அருட்தந்தை ரோகன் டி சில்வா கூறினார். இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சா ஆயர்களையும் மற்ற மதத் தலைவர்களையும் சந்தித்து, அவர்களது ஆதரவைக் கோரி வருகிறார் எனவும் அந்த முயற்சியின் ஒரு பகுதியாக ராஜபக்சா சிலாவ் (Chilaw) மறைமாவட்ட ஆயர் Valence Mendisஐ இச்செவ்வாயன்று ஆயர் இல்லத்தில் சந்தித்தார் என்றும் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.