2010-01-07 14:53:29

அணுக் குண்டுகளுக்கு தப்பியவர் காலமானார்


சன.07,2010 ஐப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட இரு அணு குண்டுகளிலும் அகப்பட்டு அவற்றின் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து தப்பிப் பிழைத்தவராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே நபர் இத்திங்களன்று மரணமடைந்துவிட்டார் என செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. சுடோமு யாமாகுச்சி (Tsutomu Yamaguchi) என்ற அந்த நபருக்கு வயது 93. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று இவர் அலுவல் காரணமாக ஹிரோஷிமாவுக்கு சென்றிருந்தபோது, அங்கு வீசப்பட்ட அணுகுண்டின் வீச்சால் பெருமளவு தீக்காயங்களுக்கு இலக்காகி தனது வீடு இருக்கும் நாகசாகிக்கு அடுத்த நாள் திரும்பினார் என்றும், ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி நாகசாகியில் அணு குண்டு வீசப்பட்டபோது மீண்டும் இவர் தப்பித்தார் என்றும் இச்செய்திக்குறிப்பு கூறுகின்றது. அணு ஆயுதங்கள் உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் களையப்பட வேண்டும் என்ற செய்தியைத் தன் வாழ்நாள் முழுவதும்  பல்வேறு உலக அரங்குகளில் யாமாகுச்சி பேசிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.