2010-01-06 16:33:59

சர்வதேச அணுசக்தி நிறுவனம் வளரும் நாடுகளில் புற்று நோய்க்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு இன்டர்னெட் மூலம் பயிற்சி


சன.06,2009 வளரும் நாடுகளில் புற்று நோய்க்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து, IAEA என்ற ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் இன்டர்னெட் மூலம் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது.

எட்டுப் பல்வேறு தலைப்புகளில் வழங்கப்படும் இப்பயிற்சியில் ஆசிய-பசிபிக் பகுதியின் 17 உறுப்பு நாடுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், உலகின் பல பகுதிகளில் அமைதிகாப்புப் பணிகளைச் செய்து வரும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அலுவலகர்களில் குறைந்தது 28 பேர் 2009ம் ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்தது.

ஐ.நா.அலுவலகர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உலகளாவிய ஒப்பந்தத்தை நாடுகள் கடைபிடிக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறும் அந்நிறுவனம், 2007ம் ஆண்டில் 42 பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறியது.

ஐ.நா.அலுவலகர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உலகளாவிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிய பின்னரும் ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளில் பாதிக்கும் குறைவாகவே அதனை அமல்படுத்தியுள்ளன என்று ஐ.நா.அலுவலகர் கிசாம்பிரா கூறினார்.








All the contents on this site are copyrighted ©.