2010-01-05 15:29:28

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கத்தோலிக்கர் தீவிரம் காட்ட ஹாங்காங் ஆயர் அழைப்பு


சன.05,2009 சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தங்களுக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படையான செயல்கள் மூலம் சாட்சிபகர வேண்டுமென ஹாங்காங் ஆயர் ஜான் டாங் ஹான் கத்தோலிக்கரைக் கேட்டுக் கொண்டார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற திருத்தந்தையின் உலக அமைதி தினச் செய்தியைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஆயர் ஜான், அனைத்துப் பங்கு மற்றும் மறைமாவட்ட அலுவலகங்கள் மின்சாரத்தை வீ ணடிக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார்.

இன்னும், சீனாவின் Guangdong மாநிலத்தில், கணணிகள், தொலைகாட்சிப் பெட்டிகள், மற்றும்பிற மின்னணு கருவிகளின் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு கேடடையும் பேரிடர் ஏற்படவிருப்பதாக பசுமைவாயுப் புரட்சி நடவடிக்கையாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மின்னணு கருவிகளின் கழிவுகளை எரிப்பது, கற்கால மற்றும் மிகவும் ஆபத்தான முறையாகும் என்று சீனாவின் மூத்த பசுமைவாயுப் புரட்சி நடவடிக்கையாளர் குளோரியா சாங் வான்கி குறை கூறினார்.

இந்தக் கழிவுகளிலிருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை எரித்துவிடும் ஏழைகள், புற்று நோய் மற்றும் தோல் வியாதிகளால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர் நோக்குகின்றனர், இந்த ஏழைகள், ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஒரு டாலர் வீதம் சம்பாதிப்பவர்கள் என்று குளோரியா கவலை தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.