2010-01-04 16:01:20

அன்னைதெரேசா தபால்தலை ஒன்றை அமெரிக்க ஐக்கிய நாட்டு அஞ்சல்துறை, வெளியிடுவதற்குத் திட்டம்


சன.04,2010 கொல்கத்தா முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அமெரிக்க ஐக்கிய நாட்டு அஞ்சல்துறை, அன்னைதெரேசா தபால்தலை ஒன்றை வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

2010ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு வெளியிடும் அஞ்சல்தலைகளில் அன்னை தெரேசாவின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல்தலையும் ஒன்றாக இருக்கும் என்று அத்துறை அறிவித்துள்ளது.

வருகிற ஆகஸ்டில் அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டு நிறைவடையும் போது அத்தபால்தலை வெளியிடப்படும்.

44 சென்ட் விலையுடைய இத்தபால்தலையை அமெரிக்க ஐக்கிய நாட்டு ஓவியர் தாமஸ் பிளாக்ஷீர் வரைந்துள்ளார்.

அன்னை தெரேசாவின் பணிவும் பரிவன்பும் மனித சமுதாயத்தின்மீது அவர் கொண்டிருந்த ஆழமான மதிப்பும் எல்லாக் காலங்களிலும் மக்களை ஈர்த்துள்ளது என்றுரைத்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அஞ்சல்துறை, 1996ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டு கௌரவ குடிமகள் என்ற நிலையை அதிபர் பில்கிளிட்டன் மற்றும் காங்கிரஸ் அவையிடமிருந்து அன்னை தெரேசா பெற்றதையும் நினைவுபடுத்தியது.








All the contents on this site are copyrighted ©.