2010-01-02 15:21:01

காங்கோ ஜனநாயக குடியரசில் LRA புரட்சியாளர்களால் நடத்தப்படும் கொலைகளும் வன்முறைச் சம்பவங்களும் நிறுத்தப்படுவதற்கு ஆயர் அழைப்பு


சன.02, 2010 ஆப்ரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசின் வடகிழக்குப் பகுதியில் LRA புரட்சியாளர்களால் நடத்தப்படும் கொலைகளும் வன்முறைச் சம்பவங்களும் நிறுத்தப்படுமாறு இந்தப் புத்தாண்டு தினத்தன்று அழைப்புவிடுத்தார் Isiro-Niangara மறைமாவட்ட ஆயர் ஜீலியன் அந்தாவோ ம்பியா.

அம்மறைமாவட்டத்தில் மீன் சந்தை பிரபல்யமாக இருக்கின்ற Manbaga ya talo என்ற கிராமத்தில் கடந்த டிசம்பரில் மட்டும் பங்குக் குரு உட்பட பல அப்பாவி பொது மக்கள் LRA புரட்சியாளர்களால் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட ஆயர், இந்த வன்முறை முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

மக்கள் பயத்தில் வாழ்வதாகக் கூறிய ஆயர், பாதுகாப்பான இடங்களைத் தேடி மக்கள் இடம் பெயர்வதாகவும் கூறினார்.

2008, செப்டம்பர் முதல் 2009 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் காங்கோ குடியரசின் வடகிழக்குப் பகுதியில் மட்டும் குறைந்தது 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1400 பேர் கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் 2.30.000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா.கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.