2010-01-02 15:23:31

உலகில் கடும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை வரலாற்றில் முதன்முறையாக நூறு கோடியை எட்டியுள்ளது- WFP தலைவர்


சன.02,2010 உலகில் கடும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை வரலாற்றில் முதன்முறையாக நூறு கோடியை எட்டியுள்ள இவ்வேளையில் இந்த 2010ம் ஆண்டில் உலகினைரப் போஷிப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று WFP என்ற உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் Josette Sheeran கூறினார்.

இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு ஏற்கனவே உதவி வரும் நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஷீரன், இவ்வாண்டில் 74 நாடுகளில் சுமார் பத்து கோடியே எண்பது இலட்சம் பேருக்கு உலக உணவு திட்ட அமைப்பு உணவு விநியோகிக்க வேண்டியுள்ளது என்றும் அறிவித்தார்.

எதிர்பாராத இயற்கைப் பேரிடர்கள், அதிகத் துன்பங்கள், இறப்புக்களைக் கொண்டுவந்த சண்டைகள் போன்றவற்றைக் கடந்த காலம் அனுபவித்துள்ளது என்ற அவர், இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வருங்காலம் நம்பிக்கையும் பாதுகாப்பும் வாய்ப்பும் நல்கக்கூடியதாய் இருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.