2009-12-30 15:48:48

Taizéன் மாநாட்டில் 30,000க்கும் மேற்பட்ட இளையோர் போலந்து நாட்டில் கலந்து கொண்டனர்


டிச.30,2009 ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் 30,000க்கும் மேற்பட்ட இளையோர் போலந்து நாட்டின் போஸ்னான் நகரில் கூடியுள்ளனர். Taizéன் பன்னாட்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இளையோர் மாநாடு ஜனவரி 2ம் தேதி வரை நடைபெறும். Taize இயக்கத்தின் தற்போதைய தலைவர் Brother Alois அண்மையில் சீனாவுக்கு மூன்று வார பயணத்தை மேற்கொண்டு, சீன மொழியில் பிரசுரமான விவிலியத்தின் பத்து லட்சம் பிரதிகளை அங்கு வழங்கியதாகச் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. இந்த சீன பயணத்தின் முடிவில் Brother Alois எழுதியுள்ள சீனாவிலிருந்து கடிதம் ("Letter from China") என்ற கட்டுரையை மாநாட்டில் உள்ள அனைத்து இளையோரும் சிந்திக்கவும், விவாதிக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கு பெரும் இளையோருக்குத் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அனுப்பியுள்ளச் செய்தியில், கிறிஸ்துவுக்கும் அவரது நற்செய்திக்கும் உண்மையான சான்று பகரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.