2009-12-30 15:52:20

பருவ நிலை மாற்றத்தால் தானிய உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன


டிச.30,2009 பருவநிலை மாற்றத்தால் உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப் படும் என்பது பெரும்பான்மையான விஞ்ஞானிகளின் கணிப்பு என்றும், அத்தகைய பாதிப்புக்களை போக்குவது எப்படி என்கிற பரிசோதனைகளில் பல்வேறு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
அதன் ஒருபகுதியாக, கடுமையான பருவ நிலை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து வளரக்கூடிய உணவு தானியப்பயிர்களை உருவாக்குவதில் தாங்கள் வெற்றியின் வாயிற்படியை தொட்டிருப்பதாக வங்கதேச விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அதாவது வங்கதேசத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் கடுமையான வெள்ளப் பெருக்கிற்கு ஈடுகொடுத்து வளரக்கூடிய மூன்று நெற்பயிர் ரகங்களை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு முதல் இந்த நெற்பயிர் ரகங்களை விவசாயிகள் விளையவைக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த வகை நெல்லினங்களில் ஒன்று ஏற்கனவே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.All the contents on this site are copyrighted ©.