2009-12-30 15:51:24

அமெரிக்க கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்திற்கும்அமெரிக்க ஆயர் பேரவைக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை


டிச.30,2009 அமெரிக்க கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்திற்கும், அமெரிக்க ஆயர் பேரவைக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதென அமெரிக்காவின் The New York Timesஅண்மையில் வெளியிட்ட செய்தி தவறானதென்று அமெரிக்க கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தின் தலைவர் அருட்சகோதரி Carol Keehan கூறியுள்ளார். அமெரிக்காவில் அண்மையில் விவாதிக்காப்பட்டு வரும் நல வாழ்வு குறித்த சட்டதிருத்தத்தில் கருகலைப்புக்கான செலவுகளை மக்களின் வரி பணத்தில் சேர்க்கக்கூடாதென அமெரிக்க ஆயர்கள் கூறியிருப்பதற்கு நலவாழ்வு சங்கத்தின் முழு ஆதரவும் உண்டு என்று இத்திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அருட்சகோதரி Keehan கூறினார். ஒரு உயிரை கருவிலிருந்து கல்லறை வரை பாதுகாப்பதே அமெரிக்க கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தின் கீழ் அடங்கும் அனைத்து மருத்துவ மனைகளின் முடிவென்றும், இதே முடிவு அமெரிக்காவின் அரசியல் முடிவாக இருப்பதையே தங்கள் அமைப்பு விரும்புகிறதென்றும் அருட்சகோதரி Keehan கூறினார்.All the contents on this site are copyrighted ©.