2009-12-30 15:48:08

டோக்கியோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Peter Seiichi Shirayanagi இறைபதம் அடைந்ததையொட்டி திருத்தந்தை இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார்


டிச.30,2009 ஜப்பானின் டோக்கியோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Peter Seiichi Shirayanagi இப்புதன் காலை இறைபதம் அடைந்ததையொட்டி திருத்தந்தை தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை ஜப்பான் தலத்திருச்சபைக்கு அனுப்பியுள்ளார்.
1928ம் ஆண்டு ஜப்பானின் Hachioji யில் பிறந்த கர்தினால் Peter 1954ல் குருவாகவும் 1966ல் ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.
உலக அமைதி, நல்லிணக்கம், ஒன்றிப்பு போன்றவைகளுக்காக அரும்பாடு பட்டுள்ள கர்தினால் Peter Seiichi ன் அடக்கச் சடங்கு வருகிற ஜனவரி 5ம் தேதி இடம் பெறும்.இக்கர்தினாலின் இறப்போடு திருச்சபையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 112 ஆனது. திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 184 ஆகும்.All the contents on this site are copyrighted ©.