2009-12-30 15:52:09

முல்லைத்தீவு மாவட்டத்தில் மறுவாழ்வு பணிகளில் தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி


டிச.30,2009 இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு அண்மையில் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது..
மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் நல வசதிகள் போன்றவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசு அதிகாரி திருமதி எமில்டா சுகுமார் கூறியதாகவும்  இச்செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரித்தப்படுத்துவதற்காக ஏனைய அரசு அலுவலகங்களும் அங்கு செயற்பட்டு வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசு அதிகாரி திருமதி ரூபவதி, கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்ற பணிகள் துரிதமாக முடிவடைந்தால், மக்களின் மீள்குடியேற்றமும் துரிதமாக முடியும் என்று கூறியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்ன்றன.All the contents on this site are copyrighted ©.