2009-12-30 15:51:53

சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகமாகியுள்ளது  திரு சங்க்லியானா


டிச.30,2009 நாட்டில் சட்டங்களைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ள அதிகாரிகள் அந்த சட்டங்களை மீறுபவர்களைக் கண்டும் காணமல் இருப்பதும் குற்றவாளிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதும் மிகவும் வேதனைக்குரிய போக்கு என்று இந்திய சிறுபான்மையினர் ஆணையத்தின் உதவித் தலைவராக  அண்மையில் நியமிக்கப்பட்ட H T சங்க்லியானா (Sangliana) தெரிவித்தார்.இந்தியாவில் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவேண்டிய அதிகாரிகள் பல சமயங்களில் தங்கள் பணியைச் சரிவர செய்யாமல் இருப்பதும், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நிகழும் போது, வன்முறையாளர்களுக்கு இந்த அதிகாரிகள் துணை போவதும் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகமாகி யுள்ளதற்கு முக்கிய காரணங்கள் என்று திரு சங்க்லியானா கூறியுள்ளார்.All the contents on this site are copyrighted ©.