2009-12-29 15:14:50

மியான்மாரில் கத்தோலிக்கரும், புத்தமதத்தினரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவைச் சிறப்பித்துள்ளனர்


டிச.29,2009 மியான்மாரில் ஒரேயொரு கத்தோலிக்கக் குடும்பம் வாழும் கிராமம் ஒன்றில் 300க்கும் மேற்பட்ட கத்தோலிக்கரும், 700 புத்தமதத்தினரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவைச் சிறப்பித்துள்ளனர்.

Ohn-pin-su என்ற கிராமத்தில் வாழும் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்துடன், அதற்கருகிலுள்ள கிராமத்தினரும் சேர்ந்து நடத்திய இக்கொண்டாட்டங்கள், கத்தோலிக்க மற்றும் புத்தமதத்தவர்க்கிடையேயான ஐக்கியத்தை எடுத்துரைப்பதாய் இருந்தது என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

இவ்விழாவில் பங்கு கொண்ட புத்த மதத்தினர், Karen இனத்தவருக்குரிய நடனங்கள் ஆடியுள்ளனர்.

இக்கொண்டாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த 46 வயது நிரம்பிய Sein Ngwe Than என்ற புத்த மதத்தவர், தாங்கள் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் ஒன்றித்திருக்கிறோம், ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கிறோம் என்று நிருபரிடம் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.