2009-12-29 15:15:14

கார்பன் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு ஐ.நா.வின் வான்பயண நிறுவனம் முயற்சி


டிச.29,2009 அண்மையில் நடந்து முடிந்த கோபன்ஹாகன் வெப்பநிலை மாற்றம் பற்றிய மாநாட்டில், வானூர்திகள் மற்றும் கடலில் பயணிப்பவை வெளியேற்றும் கார்பன் வாயுக்கள் குறித்த உடன்பாடு எதுவும் கொண்டுவரப்படவில்லையெனினும், இவ்வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐ.நா.வின் வான்பயண நிறுவனம் முயற்சித்து வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கின்ற ICAO என்ற ஐ.நா. சர்வதேச வானூர்தி நிறுவனத்தின் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில், வானூர்திகளால் வானில் வெளியேற்றப்படும் வாயுக்களின் அளவை 2050ம் க்குள், ஆண்டுக்கு 2 விழுக்காடு வீதம் குறைப்பதற்கு உடன்பாடு ஏற்படுத்தப்படுவதற்கு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிறுவனத்தின் 190 உறுப்பு நாடுகளுக்குள் இத்தகைய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் வெளியேற்றப்படும் கார்பன் வாயுக்களின் அளவில் ஏறத்தாழ 2 விழுக்காடு, வானூர்திகளால் வெளியேற்றப்படுகின்றன என்று அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.