2009-12-29 15:10:17

ஐரோப்பா, குடும்பங்களைப் பாதுகாக்குமாறு ப்ரெஞ்ச் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள்


டிச.29,2009 இந்த உலகம் கொடுக்கக்கூடியதைவிட அதிகமான அன்பு ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவதால் ஐரோப்பா, தனது சட்டங்களால் குடும்பங்களைப் பாதுகாக்குமாறு ப்ரெஞ்ச் கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில், “ஐரோப்பாவின் எதிர்காலம் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டது” என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ப்ரெஞ்ச் ஆயர்கள், எல்லாமே நலிவுற்றதாகக் காணப்படும் நம் வாழ்க்கையில் அன்பும், அதேவேளை துன்பங்களும் காணப்படுகின்றன என்றும் கூறினர்.

இன்னும், இதில் பேசிய திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ரைல்கோ, கணவன்-மனைவி இவர்களுக்கிடையே நிலவும் அன்பனாது, குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரங்களை மேற்கொள்ள உதவும் என்று கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் ஆஸ்ட்ரியா, குரோவேஷியா, சுலோவேனியா, செர்பியா, எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா, பெலாருஸ், உக்ரேய்ன், போலந்து என அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆயர்கள் மற்றும் பொதுநிலையினர் கலந்து கொண்டனர்.
All the contents on this site are copyrighted ©.