2009-12-29 16:22:37

டிசம்பர் 30 புனித சபினுஸ் 


ஆயரும் மறை சாட்சியுமான சபினுசின் (St Sabinus) திருநாள்.  நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித சபினுஸ் குறித்து பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. தியோக்லீசியன் காலத்தில் நடந்த வேத கலவரத்தின் போது இவர் கைது செய்யப்பட்டார். ஜுபிடர் தெய்வத்தின் ஒரு சிறிய சிலையை வணங்கும்படி வற்புறுத்தப்பட்டார். இவர் அந்த சிலையைத் தூக்கி கீழே எறிந்து உடைத்தார். உடனே அவரது கைகள் துண்டிக்கப்பட்டன. இரு கைகளும் இல்லாத நிலையில் இவர் சிறையிலிருந்த போது, பலரை ஆசீர்வதித்து, புதுமைகள் நிகழ்த்தினார். இதைக் கண்ணுற்றச் சிறைக் காவலரும் அவரது குடும்பமும் இவரிடம் திருமுழுக்குப் பெற்றனர். இதைக் கேள்விப்பட்ட தியோக்லீசியன் புனிதரையும், சிறைக் காவலரையும் புனிதரிடம் திருமுழுக்கு பெற்ற ஏனையோரையும் அடித்தேக் கொல்லும்படி ஆணையிட்டான்.All the contents on this site are copyrighted ©.