2009-12-29 15:15:25

நிலக்கண்ணி வெடி​களைப் புதைப்​ப​தில் விடு​த​லைப் புலி​கள் எத்​த​கைய முறை​யைப் பின்​பற்​றி​யுள்​ள​னர் என்​ப​தைக் கணிப்​பது மிக​வும் சிர​ம​மாக உள்​ளதாகச் சொல்லப்படுகிறது


டிச.29,2009 இலங்கையில், நிலக்கண்ணி வெடி​களைhd புதைப்​ப​தில் விடு​த​லைப் புலி​கள் எத்​த​கைய முறை​யைப் பின்​பற்​றி​யுள்​ள​னர் என்​ப​தைக் கணிப்​பது மிக​வும் சிர​ம​மாக உள்​ளதால், திட்​ட​மிட்​ட​படி ஜன​வரி 5-ம் தேதிக்​குள் இடம்​பெ​யர்ந்த தமி​ழர்​களை அவர்​கள் வசித்த பகு​தி​யில் குடி​ய​மர்த்​து​வது தாம​த​மா​கும் எனத் தெரி​வதாகக் கூறப்படுகி​றது.​

பொது​வாக கண்ணி வெடி​கள் 10 செ.மீ.​ ஆழத்​தில் புதைக்​கப்​ப​டு​வது வழக்​கம்.​ ஆனால் விடு​த​லைப் புலி​கள் 13 செ.மீ.​ ஆழத்​தில் கண்ணி வெடி​க​ளைப் புதைத்​துள்​ள​னர்.​ ஒரு சதுர அடி பரப்​ப​ள​வில் கண்ணி வெடி இல்லை என்​ப​தைக் கண்​ட​றிய ஆகும் செல​வு 3 டால​ரா​கும்.​

சுவிட்​சர்​லாந்து அறக்​கட்​ட​ளை​யைச் சேர்ந்த குழு​வி​னர் கடந்த 7 ஆண்​டு​க​ளாக நிலக்​கண்ணி வெடி​களை அகற்​றும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ள​னர்.​ ​

கடந்த மாதம் வரை 1,000 நிலக்​கண்ணி வெடி​கள் கண்​டு​பி​டிக்​கப்​பட்டு அகற்​றப்​பட்​டுள்​ளன.​ ​கடந்த சில ஆண்​டு​க​ளாக வட இலங்​கைப் பகு​தி​யில் மட்​டும் 15 லட்​சம் நிலக்​கண்ணி வெடி​கள் பதிக்​கப்​பட்​டி​ருக்​க​லாம் என மதிப்​பி​டப்​ப​டு​கி​றது.​ 2002-ம் ஆண்டி​லி​ருந்து கண்ணி வெடி​களை அகற்​றும் பணி நடை​பெ​று​கி​றது.​ இது​வரை 2 லட்​சம் சதுர கிலோ​மீட்​டர் பரப்​ப​ள​வில் கண்​ணி​வெ​டி​கள் அகற்​றப்​பட்​டுள்​ளது.​ இதில் பீரங்​கி​க​ளைத் தகர்க்​கும் கண்ணி வெடி​க​ளும் அடங்​கும்.​ ​தற்​போது நிலக்​கண்ணி வெடி​களை அகற்​றும் பணி​யில் 6 குழுக்​கள் ஈடு​பட்​டுள்​ளன.
All the contents on this site are copyrighted ©.