2009-12-29 15:09:16

அமெரிக்கக் கத்தோலிக்கர் அமைதிக்காக உழைக்கவும் செபிக்கவும் அழைப்பு - சிகாகோ பேராயர்


டிச.29,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர்கள் அமைதிக்காக உழைக்கவும் அதற்காகச் செபிக்கவும் வேண்டுமென்று கேட்டுள்ளார் அந்நாட்டின் சிகாகோ பேராயர் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ்.
வருகிற ஜனவரி முதல் தேதி சிறப்பிக்கப்படும் 43ம் உலக அமைதி தினத்திற்கென திருத்தந்தை வெளியிட்ட செய்தியை வரவேற்றுள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஜார்ஜ், மனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தையோடு தாங்களும் சேர்ந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதச் சுற்றுச்சூழல், இயற்கைச் சுற்றுச்சூழல் ஆகிய இவையிரண்டையும் பிரிக்க முடியாது என்பதால், கடவுளின் படைப்பையும் மனித மாண்பையும் மனித வாழ்வையும் பாதுகாப்பதற்கு அமெரிக்கக் கத்தோலிக்கர் செயல்பட்டு வருகின்றனர் என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.All the contents on this site are copyrighted ©.