2009-12-29 15:14:39

பாகிஸ்தானில் முதல் கத்தோலிக்க விண்கோள் தொலைக்காட்சி அலைவரிசை


டிச.29,2009 பாகிஸ்தானில் முதன் முறையாக கத்தோலிக்க விண்கோள் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை அந்நாட்டின் கராச்சி உயர்மறைமாவட்டம் ஆரம்பித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்குச் சற்று முன்னதாக Good News TV சேனலைத் தொடங்கி வைத்தார் கராச்சி பேராயர் எவரிஸ்ட் பின்டோ.

இந்தத் தொலைகாட்சி நிகழ்ச்சிக்குப் பொறுப்பான, அவ்வுயர்மறைமாவட்ட குருகுல அதிபர் அருள்திரு அர்த்தூர் சார்லஸ், இந்த அலைவரிசையானது, மற்ற தொலைகாட்சிகளில் காண முடியாத நிகழ்ச்சிகளை வழங்கி உயர் மதிப்பீடுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி ஒளிபரப்பை நடத்தவுள்ள இச்சேனலில் குருக்கள், முக்கிய பொதுநிலையினர், ஊடகத்துறையின் பிரமுகர்கள் எனப் பலர் பங்கு கொள்வர். திருப்பலிகள், விவிலிய வாசிப்பு, புனிதர்கள் வரலாறு, செபமாலை செபித்தல், இன்னும், அவ்வப்போதைய அரசியல் நிகவ்வுகள், இசை, பொழுதுபோக்கு, கலை, விளையாட்டு என இது பலமுகங்களில் நிகழ்ச்சிகளை வழங்கும்.
All the contents on this site are copyrighted ©.