2009-12-28 16:53:26

உரோம் சான் எஜிதியோ பிறரன்பு மையத்தில் திருத்தந்தை ஏழைகளோடு மதிய உணவு


டிச.28,2009 ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் மையத்திற்குச் சென்று அங்கு ஏழைகளோடு மதிய உணவருந்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இங்கு உணவு சாப்பிடுவது குறித்துத் தான் மகிழ்வதாகவும், இவ்வுணவைச் சமைப்பவர்கள் மற்றும் அதற்குப் பலவிதங்களில் உதவுகின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதகாவும் கூறினார் அவர்.

இங்கு சாப்பிடும் முதியோர், குடியேற்றதாரர், நிலையான குடியிருப்பு இல்லாதோர், நாடோடி இனத்தவர், ஊனமுற்றோர், ஏழைகள் எனப் பலதரப்பட்டவர்களின் வேதனை நிறைந்த நிகழ்வுகளை கேட்டறிந்ததாகவும், துன்புறும் இவர்கள் அனைவரோடு தான் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளதையும் இவர்கள் தனது எண்ணத்தி்ல என்றும் இருப்பதையும் தெரிவிக்க விரும்புவதாகவும் திருத்தந்தை கூறினார்.

இன்னும், மதிய உணவுக்கு முன்னர் இந்த எஜிதியோ மையத்தில் இத்தாலியம் படிக்கும் சுமார் 30 வெளிநாட்டவரைச் சந்தித்து, ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வதற்கு மொழி மிகவும் இன்றியமையாதது என்பதை எடுத்துச் சொன்னார் திருத்தந்தை.

மொழியில் அனைத்துக் கலாச்சாரமும், கலாச்சாரத்தின் எதிர்காலமும் கலாச்சாரத்தின் வரலாறும் அடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பை உருவாக்கிய அந்திரேயா ரிக்கார்தி திருத்தந்தைக்கு வரவேற்புரையும் நிகழ்த்தினார்.








All the contents on this site are copyrighted ©.