2009-12-28 16:57:28

குரு ஒருவரைத் தாக்கிய அரசியல்வாதி ஒருவர் காவல்துறையில் மூன்று நாட்களுக்குப் பின் சரணடைந்துள்ளார்


டிச.28,2009 இந்தியாவின் ஜலந்தர் மறைமாவட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு குரு ஒருவரைத் தாக்கிய அரசியல்வாதி ஒருவர் காவல்துறையில் மூன்று நாட்களுக்குப் பின் சரணடைந்துள்ளார்.

பஞ்சாப் மாநில எல்லையிலுள்ள பாட்டி நகரின் டக்கார்புரா திருஇதயப் பள்ளிக்குள் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுடன் நுழைந்த காஹ்கிரஸ் கட்சியின் தர்லோக் சிங் சக்வாலியாவைத் தடடுக்க முயன்ற போது குரு லாரன்ஸ் சித்துபரம்பில் துப்பாக்கி முனைகளால் தாக்கப்பட்டார்.

குருவைத் தாக்கியதில் ஈடுபட்ட பாதுகாவலர்கள் மறநாளே கைது செய்யப்பட்டிருக்க, அரசியல்வாதியோ மூன்று நாட்களுக்குப் பின்னரே சரணடைந்துள்ளார்.

இதற்கிடையே, இவ்வரசியல்வாதியை மன்னிப்பதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரு சித்துபரம்பில் அறிவித்துள்ளார்.
All the contents on this site are copyrighted ©.