2009-12-28 16:56:01

யூனியன் கார்படைடு விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்பிழைத்தவர்களுடன் திருச்சபை என்றும் அவர்கள் அருகாமையிலேயே இருக்கின்றது-போபால் உயர்மறைமாவட்டம் உறுதி


டிச.28,2009 போபால் யூனியன் கார்படைடு விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்பிழைத்தவர்களுடன் இக்கிறிஸ்துமஸ் பெருவிழாவை சிறப்பித்த போபால் உயர்மறைமாவட்டம் திருச்சபை என்றும் அவர்கள் அருகாமையிலேயே இருப்பதாக உறுதி மொழியை வழங்கியுள்ளது.

1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி விஷவாயுக் கசிவினால் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்க, அதிலிருந்து உயிர்பிழைத்தவர்களுள் ஏறத்தாழ 200 பேருடன் சிறப்பு வழிபாட்டுக் கொண்டாட்டங்களை இக்கிறிஸ்துமஸையொட்டி நடத்திய தலத்திருச்சபை, இது ஓர் அன்பின் வெளிப்பாடு என அறிவித்தது.

இம்மிகப்பெரும் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவை வழங்கி வரும் இச்செயல் மிக உன்னதமானது மட்டுமல்ல, தனக்கும் பெருபம் தூண்டுதலாக உள்ளது எனத் தலத்திருச்சபையைப் பாராட்டியுள்ளார், இவ்விபத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கான கழகத்தின் தலைவர் அப்துல் ஜாப்பார்.
All the contents on this site are copyrighted ©.