2009-12-28 16:55:14

குழந்தை இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் தாழ்ச்சியானது மனித குலத்தின் வீண்கர்வங்களைக் குணப்படுத்துவதற்கான மருந்தாக அமையலாம்- எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா


டிச.28,2009 குழந்தை இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் தாழ்ச்சியானது மனித குலத்தின் வீண்கர்வங்களைக் குணப்படுத்துவதற்கான மருந்தாக அமையலாம் என்றார் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா ப்வாடு த்வால்.
அன்பு என்பது வழக்கமாக நம்மை சுற்றியிருப்போருடனேயே நம்மை இணைத்து வருகிறது, ஆனால் இது உலகம் முழுவதும் பரவ வேண்டிய ஒன்று, ஏனெனில் அன்பின் அளவு என்பது அளவிட முடியாதது என்றார் பிதாப்பிதா.
அமைதியும் அஹிம்சாவும் பகைமை, போர், வன்முறை போன்றவைகளை மேற்கொண்டு மற்றவர்களுக்குத் தங்களைத் திறந்தவர்களாய், வரவேற்கும் மனநிலையுடன், தனிமைப்படுத்தல்களை அகற்ற பிரிவிநைச் சுவர்களை அகற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார் அவர்.
உலகப் பொருட்களை ஒருமைப்பாட்டுணர்வுடன் பகிர்வதற்கு நாம் மறுக்கும் போது பணம் என்பது நமது முதல் நோக்கமாக மாறி, நம்மை கடவுளிடமிருந்து பிரிப்பதற்கான காரணமாகிறது எனவும் பிதாப்பிதா த்வால் உரைத்தார்.All the contents on this site are copyrighted ©.