2009-12-28 16:56:41

நேபாளத்தில் கிறிஸ்தவ அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டியது அவசியம்- ஆயர் ஷர்மா


டிச.28,2009 நேபாளத்தின் கிறிஸ்தவ சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட, கிறிஸ்தவ அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டின் ஆயர் அந்தோணி ஷர்மா.

கிறிஸ்தவர்களுக்கான கல்வியும் வாய்ப்புகளும் மிகவும் குறைவுபடுவதாக உரைக்கும் இயேசு சபை ஆயர் ஷர்மா, தேசிய அரசியலில் பங்கேற்க கிறிஸ்தவர்கள் முன்வர வேண்டுமென்றார்.

2 கோடியே 59 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட நேபாளத்தில் 7 இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுள் ஒருவர்கூட கிறிஸ்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
All the contents on this site are copyrighted ©.