2009-12-26 17:11:24

பல திருச்சபைத் தலைவர்கள், பல அரசுத் தலைவர்கள் திருத்தந்தையுடனானத் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்


டிச.26,2009 கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியின் துவக்கத்தில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நடந்த சம்பவத்தை முன்னிட்டு உலகில் பல திருச்சபைத் தலைவர்கள், துறவற சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் திருத்தந்தையுடனானத் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பெருவிழாத் திருப்பலி நிகழ்த்துவதற்காகப் பவனியாகச் சென்று கொண்டிருந்த திருத்தந்தை16ம் பெனடிக்ட் மீது பெண் ஒருவர் மோதி அவரை தரையில் தள்ளிவிட்டார். அச்சமயத்தில் அவரோடு சென்று கொண்டிருந்த 87 வயதாகும் ப்ரெஞ்ச் கர்தினால் ரோஜர் எச்சகராய்க்கு இடுப்பெலும்பு முறிந்து உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனை முன்னிட்டு இத்தாலிய அரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல அரசுத் தலைவர்களும் திருச்சபைத் தலைவர்களும் திருத்தந்தையுடனானத் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.All the contents on this site are copyrighted ©.