2009-12-26 17:12:25

தென் கொரிய கிறிஸ்தவர்களுக்கென ஆயர்களின் கிறிஸ்துமஸ் செய்தி


டிச.26,2009 மரணக் கலாச்சாரத்தைத் தோற்கடித்து, உலகப் பொருட்களின் மீதான வேட்கையைத் தவிர்த்து, மோதல்களால் மாசுபடிந்துள்ள சமூகத்தைத் தூய்மைப்படுத்தி கிறிஸ்துவின் அன்பை நண்பர்களோடும் அயலாரோடும் பகிர்ந்து கொள்ள கிறிஸ்துமஸ் அழைப்பு விடுக்கிறது என்று தென் கொரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரிய கிறிஸ்தவர்களுக்கென சியோல் பேராயர் கர்தினால் நிக்கோலாஸ் செயோங் ஜின்சுக் வெளியிட்ட கிறிஸ்துமஸ் செய்தியில், மக்கள், பணம், சொத்து போன்றவற்றைத் தங்களின் உயரிய விழுமியங்களாகக் கொல்ளும் வரை அவர்கள் தனிமையில் வாழ்வர் என்று கூறியுள்ளார்.இந்தத் தனிமையானது, மோதல்களுக்கும் பிரிவினைகளுக்கும் தளமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.All the contents on this site are copyrighted ©.