2009-12-26 17:12:07

ஆங்கிலிக்கன் சபையின் பேராயர் ரோவன் வில்லியம்ஸின் கிறிஸ்துமஸ் செய்தி


டிச.26,2009 சிறுவர்கள் தமது குழந்தைப் பருவத்தை தொலைத்துவிட்டு மிக விரைவாக வளர்வதற்கு பலவந்தப்படுத்தப்படுகிறார்கள் என்று ஆங்கிலிக்கன் சபையின் தலைவரான கண்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ், தனது கிறிஸ்துமஸ் தினச் செய்தியில் கூறியுள்ளார். சில நாடுகளில் சிறுவர்களின் வாழ்க்கை முறை, பள்ளிகளில் ஓய்வின்றி கடும் அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், அவர்கள் தொடர் விளம்பரங்களால் பாதிக்கப்படுவதாகவும், இன்னும் சில நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களால் சிதைக்கப்பட்டு கடத்தப்பட்டு கொல்லப்படுவதாகவும் பேராயர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.All the contents on this site are copyrighted ©.