2009-12-25 14:15:18

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கான URBI ET ORBI வாழ்த்துச் செய்தியை வழங்கினார் பாப்பிறை


டிசம்பர் 25, 2009 கிறிஸ்து பிறப்பு பெருவிழாவான இவ்வெள்ளியன்று நண்பகல் 12 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலய முகப்பில் உள்ள மேல் வளாகத்தில் நின்று கொண்டு URBI ET ORBI வாழ்த்துச் செய்தியை வழங்கினார் பாப்பிறை. “ஊருக்கும் உலகுக்கும்”, அதாவது, “ரோமை நகருக்கும் உலகுக்கும்” என்ற பெயரிலான இவ்வாழ்த்தும் ஆசீரும் ஒவ்வோர் ஆண்டும் திருத்தந்தையால் இருமுறை வழங்கப்படுகின்றன. அதாவது கிறிஸ்து பிறப்பு பெரு விழாவன்றும், கிறிஸ்து உயிர்ப்பு நாளன்றும்.

இவ்வாழ்த்துச் செய்திக்குப்பின் 65 மொழிகளில் தன் வாழ்த்துக்களை வழங்கினார் பாப்பிறை. Paraguay செவ்விந்தியர்களின் மொழியான Guarani, New Zealand பழங்குடியினரின் Maori மொழி, மேலும் தமிழ், மலையாளம், ஹிந்தி, சிங்களம், உருது, பெங்காலி, ஆங்கிலம் உட்பட 65 மொழிகளில் தன் வாழ்த்துக்களை வழங்கினார் பாப்பிறை.
தமிழில் அவர் கூறிய வாழ்த்துச் செய்தி இதோ:
"கிறிஸ்து பிறந்த தின வாழ்த்துக்கள்." RealAudioMP3
 வாழ்த்துக்களுக்குப் பின்னர், திருத்தந்தை இப்பெருநாளில் URBI ET ORBI சிறப்பு ஆசீரையும் வழங்கினார். RealAudioMP3All the contents on this site are copyrighted ©.