2009-12-23 15:28:31

பாகிஸ்தான் அரசு கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு கிறிஸ்தவர்களுக்கு உணவு, உடைகளைக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது 


டிச.23,2009 பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநில அரசு கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு கிறிஸ்தவர்களுக்கு உணவு, உடை போன்ற பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. வழக்கமாக, ரமதான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு இப்படி ஒரு வசதியை செய்து வரும் பாக்கிஸ்தான் அரசு, இம்முறை கிறிஸ்தவர்களுக்கும் இந்த சலுகையை முதன் முறையாகச் அளித்திருப்பது நல்லதொரு முயற்சி என்று கத்தோலிக்க அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ரமதான் கொண்டாட்டங்களின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ஏறத்தாழ 900 கோடி ரூபாய் மதிப்புள்ளது எனவும், இப்போது கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  சலுகைகள் 40 லட்சம் ரூபாய்க்கும் குறைவே என்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். டிசம்பர் 24ஆம் தேதி வரை பாகிஸ்தானின் 16 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 23 கிறிஸ்தவ சந்தைகள் வழியாக குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன என்றாலும், இவற்றை வாங்குவதற்கு அதிக கிறிஸ்தவர்கள் முன்வராமல் இருப்பதற்கு அவர்களது ஏழ்மை நிலையே காரணம் என்று புனித செபமாலை ஆலயப் பங்கு தந்தை அருட்திரு பஷீர் பிரான்சிஸ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.